Wednesday, October 11, 2006

தீவிரவாதம் பலி கொண்ட வீரத் தமிழன்

நேற்று செய்தியில் வாசித்தது:

தமிழ்நாடு அனகாபுத்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 23 வயது நிரம்பிய இந்திய ராணுவ லெப்டினன்ட் கடந்த சனிக்கிழமையன்று, காஷ்மீரத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டருகே (LoC) தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவர் உயிர் துறப்பதற்கு முன் 5 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியிருக்கிறார் !

FROM THE ALBUM: Lt. N. Parthiban with his parents, Tamil Selvi and Major V. Natarajan (retired), during the pipping ceremony at the Officers Training Academy in March.

அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி யாத்திரையில் ராணுவ அதிகாரிகளும், நண்பர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவருடன் பணியாற்றிய ராணுவ நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றது, திரண்டிருந்த மக்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

பார்த்திபன், சென்னையிலுள்ள Officers Training Academy (OTA) யிலிருந்து பட்டம் பெற்றவர். ஜம்மு காஷ்மீரில் 5 JAK LI (Light Infantry) ரெஜிமெண்டில் சேவை புரிந்தவர். அவரது தந்தையார் நடராஜன் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பார்த்திபனின் தாயார் தமிழ்ச்செல்வி. அவருக்கு புஷ்பா, கார்த்திகா என்ற இரு சகோதிரிகள் உள்ளனர்.

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, தான் ஈடுபட இருக்கும் ஆபத்தான வேலை குறித்து தன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பேசியிருக்கிறார். தான் அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் !

தீவிரவாதத்திற்கு, இன்னும் இது போல எத்தனை வீர இளைஞர்களை பலி கொடுக்கப் போகிறோமோ என்பதை எண்ணிப் பார்க்கையில் நெஞ்சு கனக்கிறது !


சுட்டிகள்:

ஒன்று

இரண்டு

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 243 ***

22 மறுமொழிகள்:

bala said...

கனத்த நெஞ்சுடன் வீரத் தமிழனுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

பாலா

Unknown said...

இதுபற்றி சிவபாலன் முன்பே பதிவிட்டிருந்தார் பாலா

அதனால் என்ன?இன்னும் ஆயிரம் பதிவுகள் பதிக்க தகுதி உள்ளவர் தான் இம்மாவீரர்.

பழந்தமிழ் வீரம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இவரே உதாரணம்

அவர் குடும்பம் நல்லபடி வாழவும் கோடானுகோடி பார்த்திபன்கள் மீண்டும் இம்மன்ணில் வந்துதிக்கவும் கடவுளை வேண்டுகிறேன்

நாடோடி said...

//தீவிரவாதத்திற்கு, இன்னும் இது போல எத்தனை வீர இளைஞர்களை பலி கொடுக்கப் போகிறோமோ என்பதை எண்ணிப் பார்க்கையில் நெஞ்சு கனக்கிறது !//

என்னாது தீவிரவாதமா?.. அய்யா நிறைய பேரு இங்கன சுதந்திரபோராட்டமுனு சொல்லுராங்க.அதைபோயி தீவிரவாதமுனா..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

60 ஆண்டுகளுக்கு மேலாக பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 60 ஆண்டுகள் இதுவே மிகப் நெடிய காலம் தான் இதற்கு முடிவு சமீபத்தில் இருப்பதாகவும் தோன்றவில்லை. இன்னும் எத்தனை காலம் பலி கொடுப்போம் என்றும் தெரியவில்லை.

என்னைப் போன்றவர்கள் இங்கு அமைதியாக வாழ தன்னுயிரை நீத்த வீரருக்கு நானெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? அவருடைய குடும்பத்தினருக்கு என் அஞ்சலிகள்.

Unknown said...

வீரனுக்கு என்ன்னுடைய வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

enRenRum-anbudan.BALA said...

பாலா, செல்வன், நாடோடி, குமரன், தேவ்,
உங்கள் கருத்துக்கள் நம்பிக்கையையும், ஆறுதலையும் அளிக்கின்றன. நன்றி.
எ.அ.பாலா

said...

We pray for the Hero.

Ceylon Tamils

said...

We Salute for the national Hero.

tamil Eelam Friends

Amar said...

எ.அ.பாலா.

செல்வன் சொன்னதை போல இன்னும் ஆயிரம் பதிவுகளை போடலாம்.


They went with songs to the battle, they were young,
Straight of limb, true of eye, steady and aglow.
They were staunch to the end against odds uncounted;
They fell with their faces to the foe.

They shall grow not old, as we that are left grow old:
Age shall not weary them, nor the years condemn.
At the going down of the sun and in the morning
We will remember them.

பதிவிற்க்கு நன்றி.
மிலிட்டரியில் சுட்டிபோடுகிறேன் - நேரம் கிடைத்தவுடன்.

சமுத்ரா

enRenRum-anbudan.BALA said...

Tamil Ealam friends, Ceylon Tamils,

Thanks !

Samudra,
நன்றி.
//At the going down of the sun and in the morning
We will remember them.
//
WE MUST !!!

//மிலிட்டரியில் சுட்டிபோடுகிறேன் - நேரம் கிடைத்தவுடன்.
//
நன்றி, சீக்கிரம் போடுங்கள். எனக்கும் தெரிவிக்கவும்.

Sivabalan said...

லெப்டினென்ட் பார்த்திபனுக்கு எனது வீர அஞ்சலியை சமர்பிக்கிறேன்..

அவரது குடும்பத்தாரு ஆழ்ந்த அனுதாபங்கள்..

http://sivabalanblog.blogspot.com/2006/10/blog-post_10.html

enRenRum-anbudan.BALA said...

சிவபாலன்,
நன்றி. உங்கள் பதிவை செல்வன் சொல்லி ஏற்கனவே பார்த்து விட்டேன்.

enRenRum-anbudan.BALA said...

சிவபாலன்,
நன்றி. உங்கள் பதிவை செல்வன் சொல்லி ஏற்கனவே பார்த்து விட்டேன்.

said...

good posting

மெளலி (மதுரையம்பதி) said...

அந்த வீரர்எல்லாம் வல்ல இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பம் இதிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழும்.

We The People said...

ஹலோ! தீவிரவாதமா?? என்ன சொல்லறீங்க! அது சுதந்திர போராட்டமாம் இங்க பலர் சொல்லறாங்க!!! நீங்கபாட்டுக்கு இதை தீவிரவாதம் என்று சொல்லாதீங்க!!! அப்பறம் வண்மையான கண்டனங்களுக்கு ஆளாக போறீங்க??? என்ன கொடுமைடா சாமி இது!!!

said...

"தீவிரவாதத்திற்கு, இன்னும் இது போல எத்தனை வீர இளைஞர்களை பலி கொடுக்கப் போகிறோமோ என்பதை எண்ணிப் பார்க்கையில் நெஞ்சு கனக்கிறது !"
Neengal solvathu correct .

enRenRum-anbudan.BALA said...

Mouls, We the people, C.M.Haniff, CT,

Thanks for paying your respects to a Brave young soldier.

CT,
//bala I am wondering is there any ex military service men and women association. If so I would like to know more information on this.
//
I will check and let you know.

CAPitalZ said...

ஏன் இந்தியா ஜம்மு காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கலாமே?
அவர்கள் இரண்டு நாடுகளுடன் சேரமாட்டோம் என்று தானே இந்தியா உருவாகும்போதே சொன்னவர்கள்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

Hariharan # 03985177737685368452 said...

தேச பாதுகாப்பில் எல்லையில் போரில் வீர மரணமடைந்த வீரத்தமிழனுக்கு எனது வீரவணக்கங்கள்!

இராணுவத் தமிழன் மரணத்திற்கு இஸ்லாமிய அஞ்சலி ஒண்ணைக்கூட காணோம். ***** edited *****


அன்புடன்,

ஹரிஹரன்

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

இது போன்ற பதிவில் சச்சரவு வேண்டாம் என்பதால், உங்கள் பின்னூட்டத்தை எடிட் செய்தேன். மன்னிக்கவும். நன்றி.

enRenRum-anbudan.BALA said...

CAPitalZ,

Thanks ! I read the postings !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails